மீட்பு, தேடுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் வகையிலான ரோபோ எலியை விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்.
நடை, பாவனை என கொறிக்கும் தன்மையைத் தவிர்த்து அச்சுஅசல் உண்மையான எலியை போன்று பெய்ஜிங் தொழில் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்.
குறுகிய இடைவெளி பகுதிகளில் நடத்தப்படும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு ரோபோ நாய்களை விட இயந்திர எலி மிகுந்த பயனளிக்கக் கூடியதாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்தார்.
அண்மைக் காலமாக நாய், மீன் உள்ளிட்டவை ரோபோ முறையில் உருவாக்கப்பட்ட நிலையில் தற்போது புது முயற்சியாக ரோபோ எலியை விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்.