தற்போதைய அச்சுறுத்தல் மதிப்பீட்டின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் உட்பட 184 பேரின் பாதுகாப்பை பகவந்த் மானின் பஞ்சாப் அரசு திரும்பப் பெற்றுள்ளது.
முன்னாள் அமைச்சர்கள் பிபி ஜாகிர் கவுர், மதன் மோகன் மிட்டல், சுர்ஜித் குமார் ரக்ரா, சுச்சா சிங் சோட்டேபூர், ஜன்மேஜா சிங் செகோன், டோட்டா சிங் மற்றும் குல்சார் சிங் ராணிகே ஆகியோரின் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முன்னாள் முதல் அமைச்சர்களின் குடும்பத்தினருக்கான பாதுகாப்பும் திரும்பப் பெறப்பட்டுள்ளது. பஞ்சாப் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி மற்றும் அமரீந்தர் சிங்கின் மகன் ரனீந்தர் சிங் ஆகியோரின் குடும்பத்தினருக்கான பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. முன்னாள் எம்பியும், ஐபிஎல் முன்னாள் தலைவருமான ராஜீவ் சுக்லா, பஞ்சாப் தேர்தலில் பாஜகவின் நட்சத்திரப் பரப்புரையாளராக இருந்த மஹி கில் மற்றும் முன்னாள் டிஜிபி சித்தார்த் சட்டோபாத்யாயின் மகன் சிதாந்த் ஆகியோரின் பாதுகாப்பும் திரும்ப பெறப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களின் பாதுகாப்பை ஆம் ஆத்மி அரசு வாபஸ் பெறுவது இது இரண்டாவது முறையாகும்.
ஏற்கனவே ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, பஞ்சாப் காவல்துறை மார்ச் 11 அன்று 122 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களின் பாதுகாப்பை திரும்பப் பெற உத்தரவிட்டது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM