முறையான ஆவணங்கள் இன்றி இந்தியாவில் சுற்றித்திரிந்த உக்ரேனியர்கள் – அஸ்ஸாமில் கைது!

அஸ்ஸாம் மாநிலம் கரீம்கஞ்ச் மாவட்டத்தில் உக்ரேனிய குடிமக்கள் இருவர் திரிபுரசுந்தரி எக்ஸ்பிரஸில் டெல்லிக்கு செல்வதை ரயில்வே காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக காவல்துறை, “ரயில்வே போலீஸார் வழக்கமான சோதனையில் அகர்தலாவில் இருந்து டெல்லி செல்லும் ரயில் அஸ்ஸாமில் உள்ள படற்பூர் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தனர். 

Assam

அப்போது ரயிலில் இரண்டு உக்ரேனிய குடிமக்கள் இருந்ததை கண்டறிந்தனர். அதை தொடர்ந்து அவர்களிடம் பாஸ்போர்ட் மற்றும் விசா போன்றவை விசாரிக்கப்பட்டது. அப்போது அவர்கள் இருவரும் தங்களை கிறிசின்ஸ்கி வோலோடிமிர் (39) மற்றும் நசாரி வோஸ்னியுக் (21)  என அறிமுகப்படுத்திக்கொண்டனர். மேலும், தங்களின் பயண ஆவணங்கள் தொலைந்து விட்டதாக தெரிவித்தனர். 

ரயில்

இது தொடர்பாக காவல்துறை கண்காணிப்பாளர் இவர்களின் பதிவுகளைப் சரிபார்க்க உக்ரைன் நாட்டின் தூதரகத்தை தொடர்பு கொண்டுள்ளார். அவர்களிடமிருந்து பதில் வரும்வரை அந்த இரண்டு உக்ரேனிய குடிமக்களும் காவலில் வைக்கப் படுவார்கள். வெள்ளிக்கிழமை இரவுக்குள் உக்ரேனிய தூதரகம் இது தொடர்பாக பதிலளிக்க தவறினால் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த படுவார்கள். 

மேலும், இவர்கள் திரிபுராவில் எப்படி நுழைந்தார்கள் என்பதை அவர்களால் சொல்ல முடியவில்லை. இவரிடமிருந்து வங்கதேச கரன்சி நோட்டுகள், காலணிகள், உடைகள் மற்றும் பிற பொருட்களை ரயில்வே காவல்துறை அதிகாரி பறிமுதல் செய்துள்ளனர்” எனக் தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.