வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பீஜிங்:மூன்றாவது முறையாக சீன அதிபராகிறார் ஜி -ஜின்பிங்.
கடந்த 2021-ம் ஆண்டு நவம்பரில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 19-வது மத்திய உயர்நிலைக்குழு மாநாடு தலைநகர் பீஜிங்கில்,நடைபெற்றது. இதில் கட்சி முக்கிய பொறுப்பில் உள்ள 400 தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் சீன அதிராக இருக்கும் ஜி ஜின்பிங்கை மூன்றாவது முறையாக அதிபராகத் தேர்ந்தெடுக்க வழிசெய்யும் 14 பக்க தீா்மானத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
அந்தத் தீர்மானத்தில்,2022-ம் ஆண்டு கட்சியின் 20-வது தேசிய மாநாட்டை நடத்துவது, அந்த மாநாட்டில் ஜி ஜின்பிங்கை மூன்றாவது முறை அதிபராகப் பதவியேற்பதற்கான ஒப்புதல் வழங்குவது, சிறப்பு கூடுதல் அதிகாரத்தை வழங்குவது போன்ற பல முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில் ஜின்பிங்கின் இரண்டாவது அதிபர் பதவிக்காலம் முடிவடையவிருக்கும் நிலையில், இந்தாண்டு நடைபெறவிருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் மூன்றாவது முறையாக சீன அதிபராக ஜி ஜின்பிங் பதவியேற்கவிருப்பது உறுதியாகியிருக்கிறது.
சட்டவிதி நீக்கம்
கடந்த 2012-ம் ஆண்டு ஜி ஜின்பிங் சீன அதிபராக முதன்முறையாக பொறுப்பேற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து 2018-ல் இரண்டாவது முறையாகவும் சீன அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சீன அரசியல் சாசனப்படி, ஒருவர் இரண்டு முறை மட்டுமே அதிபராகப் பதவிவகிக்க முடியும். ஆனால், 2018-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தத்தில் அந்த விதி நீக்கப்பட்டது. அப்போதே, இந்தச் சட்டத் திருத்தம் ஜி ஜின்பிங் பதவிக் காலத்தை நீட்டிப்பதற்காக எடுக்கப்பட்ட முன்னேற்பாடாகவே கருதப்பட்டது.
Advertisement