ரெயிலில் விநியோகிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய ‘செய்தித்தாள்’, உரிமதாரருக்கு எச்சரிக்கை

பெங்களூரு
நேற்று பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வந்த சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில்  சர்ச்சைக்குரிய கட்டுரைகள் அடங்கிய அங்கீகரிக்கப்படாத பத்திரிகை விநியோகிக்கபட்டு உள்ளது. இந்திய ரெயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) அதன் உள் சேவைகள் உரிமதாரருக்கு இது தொடர்பாக எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

ரெயில் பயணிகளுக்கு பெங்களூரில் இருந்து வெளிவரும் ஆர்யவர்த் எக்ஸ்பிரஸ் என்ற பத்திரிகை விநியோகிக்கபட்டு உள்ளது. அதில் “இஸ்லாமிய ஆட்சியின் கீழ் இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்களின் இனப்படுகொலை செயயப்பட்டது அங்கீகரிக்கப்பட வேண்டும்” மற்றும் “ஐ.நா. ஔரங்கசீப்பை ஹிட்லரைப் போன்ற படுகொலைகள் செய்தவர் என முத்திரை குத்த வேண்டும் என்ற தலைப்புகளில் கட்டுரைகளை வெளியிடப்பட்டு இருந்தது.
ரெயில் விநியோகத்திற்கான உரிமம் பெற்ற பிகே ஷெஃபி கூறியதாவது;-
அங்கீகரிக்கப்பட்ட செய்தித்தாள்களின்  விற்பனையாளரால் இந்த துணை பத்திரிகை விநியோகிக்கப்பட்டது என கூறினார்.
ஆனால் பேப்பரை பார்த்த  ஒரு பயணி, அது  அவ்வாறு கொடுக்கப்பட வில்லை என்று டுவீட் செய்துள்ளார்.”செய்தித்தாள்” வெள்ளிக்கிழமை காலை ரெயிலில் இருந்த கோபிகா பக்ஷி என்ற டுவிட்டர் பயனரால் பகிரபட்டது.
அவர் தனது டுவிட்டரில் இன்று காலை நான் பெங்களூர்-சென்னை சதாப்தி விரைவு வண்டியில் ஏறினேன், எல்லா இருக்கைகளிலும்  அப்பட்டமான பிரச்சாரப் பத்திரிகை ந்ஆர்யவர்த் எக்ஸ்பிரஸ் விநியோகிக்கபட்டது. இதுவரை நான் இத்னை கேள்விப்பட்டதே இல்லை. @IRCTCofficial இதை எப்படி அனுமதிக்கிறார்???” என்று பத்திரிகையின் புகைப்படத்துடன் டுவிட் செய்து உள்ளார்.
இது குறித்து ஐஆர்சிடிசின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ரஜினி ஹசிஜா  கூறியதாவது:-
“நாங்கள் உரிமதாரரை எச்சரித்துள்ளோம். ஒப்பந்தத்தின்படி, உரிமம் பெற்றவர் டெக்கான் ஹெரால்டு மற்றும் கன்னடப் பத்திரிகையின் துணை  நகல்களை மட்டுமே வழங்க வேண்டும். அவர் ஒப்பந்த நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டும்,” என்றுதெரிவித்து உள்ளார்.
பெங்களூரு கோட்ட ரெயில்வே மேலாளரும் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க அவரது குழுவிற்கு அறிவுறுத்தினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.