தங்கம் விலையானது அவுன்ஸூக்கு சில தினங்களுக்கு முன்பு 2000 டாலர்களை தொட்டுள்ளது. இதே இந்திய சந்தையில் 10 கிராமுக்கு 52,264 ரூபாய் என்ற லெவலையும் எட்டியுள்ளது.
இந்திய சந்தையில் தங்கத்தின் வரலாற்று உச்ச விலையானது 10 கிராமுக்கு 56,191 ரூபாயை தொட்டது. அதிலிருந்து தற்போதைய விலையுடன் ஒப்பிடும்போது 10 கிராமுக்கு கிட்டதட்ட 4000 ரூபாய் குறைவாகத் தான் உள்ளது.
இது வாங்க சரியான நேரமா? வாங்கலாமா? வேண்டாமா? நடப்பு வாரத் தொடக்கத்தில் ஏற்றத்தில் இருந்தாலும், வாரத்தின் பிற்பாதியில் சரிவினைக் கண்டது.
சூப்பர் சரிவில் தங்கம் விலை.. எவ்வளவு குறைஞ்சிருக்கு தெரியுமா.. !
முக்கிய காரணிகள்
இது தங்கம் விலையினை இரண்டு வார சரிவுக்கு உந்தியது. அமெரிக்காவின் பத்திர சந்தை ஏற்றம், வட்டி விகிதம் அதிகரிப்பு, டாலர் மதிப்பு ஏற்றம் உள்ளிட்ட பல காரணிகளும் தங்கத்திற்கு சாதகமாக உள்ளன. எனினும் ரஷ்யா – உக்ரைன் போரானது தங்கம் விலையினை அதிகமாக சரியாமல் தடுக்கலாம். மேலும் தங்கம் விலையை ஊக்குவிக்கும் விதமாக சர்வதேச அளவில் பணவீக்க விகிதமும் உச்சம் தொட்டுள்ளது.
விலை அதிகரிக்கலாம்
மேலும் தொடர்ந்து பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் தங்கத்தின் தேவையானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. மொத்தத்தில் தங்கத்தின் விலையானது ஒட்டுமொத்த பார்வையில் இன்னும் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
முக்கிய லெவல்கள்
தங்கத்தின் முக்கிய சப்போர்ட் லெவலாக அவுன்ஸூக்கு 1870 டாலர்களாக கணித்துள்ளனர். ஏற்கனவே வலுவான தேவைக்கு மத்தியில் இந்திய சந்தையில் 10 கிராமுக்கு 53,500 ரூபாயினை தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐஐஎஃப்எல் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் எம்சிஎக்ஸ் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு, முக்கிய சப்போர்ட் ஆக 52,000 ரூபாயாகவும், 51,400 ரூபாயாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இந்த லெவலில் வரும்போது வாங்க சரியான இடமாகவும் பார்க்கப்படுகிறது.
கவனிக்க வேண்டிய காரணிகள்
எப்படியிருப்பினும் அரசியல் பதற்றம், சர்வதேச பணவீக்கம், வட்டி விகித அதிகரிப்பு, பத்திர சந்தை, பத்திரம் வாங்குதல் குறைப்பு, ரஷ்யா – உக்ரைன் பிரச்சனை என பல காரணிகளுக்கு மத்தியில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
gold price Rs.4000 away from all life time high, should we buy or sell?
gold price Rs.4000 away from all life time high, should we buy or sell?/வரலாற்று உச்சத்திற்கு ரூ.4000 மட்டுமே பாக்கி.. இப்போது வாங்கலாமா.. விற்கலாமா?