மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக இருந்து, டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் நடிகை நடிகை நஸ்ரியா. தொடர்ந்து பல மலையாளப் படங்களில் நடித்து, குறும்பு தனங்களாலும், கியூட் ரியாக்ஷ்னாலும் ரசிகர்களின் உள்ளத்தை வெகுவாக கவர்ந்தார். இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமும் உருவானது.
தமிழில், ராஜா ராணி, நையாண்டி, நேரம், வாயை மூடிபேசவும் என குறைந்த படங்களையே அவர் நடித்திருந்தாலும் இன்றுவரை நஸ்ரியாவுக்கு என்றே தமிழ் சினிமாவில் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போதே தனது காதலனான நடிகர் பாஹத் பாசிலை திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்குப் பின்னர் சினிமாவில் இருந்து சிலகாலம் ஒதுங்கி இருந்தார் நஸ்ரியா. அவ்வப்போது சில மலையாளப் படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் தற்போது ‘
அடடே சுந்தரா
‘ என்ற படத்தில்
நானி
ஜோடியாக நடித்துள்ளார். காமெடி லவ் டிராக்கில் உருவாகியுள்ள இந்தப்படத்தின் டீசர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக வெளியானது.
சமந்தாவ இன்னும் டைவர்ஸ் பண்ணல: நாக சைதன்யா பரபரப்பு தகவல்.!
இந்நிலையில் இந்தப்படத்தின் பத்திரிகையாளர் போது, இந்தப்படத்தில் ஹிந்து பையனின் மனைவியாக லீலா தாமஸ் என்ற கிறிஸ்தவ பெண்ணாக நடித்துள்ளீர்கள். ஸ்கிரிப்டைத் தேர்ந்தெடுப்பதில் என்ன சிரமங்களை எதிர்கொண்டீர்கள்? எந்தக் கட்டத்தில் இந்தக் கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுத்தீர்கள்? என்று நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த நஸ்ரியா, “நான் ஸ்கிரிப்டை விரும்பினேன், அதை விவேக் என்னிடம் விவரித்த கூறிய போது எனக்கு மிகவும் பிடித்து போனது. லீலா தாமஸ் வேடத்தில் நடிக்க நான் எதையும் பெரிதாக செய்யவில்லை. நான் லீலா தாமஸ் கதாபாத்திரத்தை புரிந்துகொண்டு அதற்கு தேவையானதை மட்டுமே இயக்குனர் என்ன விரும்புனாரோ அதைச் செய்து கொடுத்துள்ளேன் என தெரிவித்துள்ளார். இப்படம் ஜூன் 10 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
நான் பிஜேபி கிடையாது; மன்னிப்பு கேட்ட பாக்கியராஜ்!