எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க வேதாந்தா குழுமம் நிறுவனம் தமிழக அரசிடம் அனுமதி கோரியிருப்பதாக செய்திகள் வருகின்றன். உண்மையெனில், அத்தகைய அனுமதி எதையும் தமிழக அரசு வழங்கிடக் கூடாது என்று, டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
“தமிழகத்தில் விழுப்புரம், நாகப்பட்டினம் மாவட்டங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க வேதாந்தா குழுமம் நிறுவனம் தமிழக அரசிடம் அனுமதி கோரியிருப்பதாக செய்திகள் வருகின்றன்.
அது உண்மையெனில், அத்தகைய அனுமதி எதையும் தமிழக அரசு வழங்கிடக் கூடாது. மேலும் இது தொடர்பான விவரங்களை மக்களுக்கு தமிழக அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்”
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் விழுப்புரம், நாகப்பட்டினம் மாவட்டங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க வேதாந்தா குழுமம் நிறுவனம் தமிழக அரசிடம் அனுமதி கோரியிருப்பதாக செய்திகள் வருகின்றன். (1/2)
— TTV Dhinakaran (@TTVDhinakaran) April 23, 2022