தமிழகத்தில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 9-ம் தேதி பொதுத்தேர்வு தொடங்கி, மே 31-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 5-ம் தேதி பொதுத் தேர்வு தொடங்கி, மே 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் நடைபெற உள்ள 10,11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கண்காணிப்பு பணிகளுக்கு 38 மாவட்டங்களுக்கும் தனித்தனி அதிகாரிகளை நியமித்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுக்கு நேரம் குறைக்கப்பட்டுள்ளது. செய்முறைத் தேர்வு நேரத்தை 3 மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரமாக குறைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்..
மேலும் பொதுத் தேர்வில் மாணவர்கள் பிட் அடித்தால் 2 ஆண்டுகள் தேர்வு எழுத முடியாது. அதேபோல் வினாத்தாள் லீக் செய்தால் மூன்று ஆண்டுகளுக்கு தேர்வு எழுத முடியாது என பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.