Tamil Nadu News Updates: நிலக்கரி இறக்குமதி செய்யவும், கூடுதலாக 550 மெகாவாட் மின்சாரமும் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் 2 நாட்களில் மின் தடை என்ற பேச்சுக்கே இடம் இருக்காது என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
கோயில் விழா – உதவி ஆய்வாளருக்கு கத்திக்குத்து
நெல்லை சுத்தமல்லி அருகே கோயில் கொடை விழாவில் உதவி ஆய்வாளருக்கு கத்திக்குத்து. படுகாயமடைந்த எஸ்.ஐ., மார்க்ரேட் திரேஷாவுக்கு நெல்லை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை. கத்தியால் குத்திய நபரை பிடித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் 17வது நாளாக இன்றும் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ110.85க்கும், டீசல் ரூ100.94க்கும் விற்பனையாகிறது.
நடிகர் விமல் மீது மேலும் ஒரு புகார்
நடிகர் விமல் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேலும் ஒரு புகார். 1 கோடி ரூபாய் கடனை திருப்பித் தரவே இல்லை என படத் தயாரிப்பாளர் சிங்காரவேலன் குற்றச்சாட்டு
ஐபிஎல்: ராஜஸ்தான் அணி வெற்றி
ஐபிஎல்: டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 15 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி. முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 222 ரன்களை குவிப்பு. தொடர்ந்து ஆடிய டெல்லி அணி 8 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்து தோல்வி.
சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழந்த விவசாரத்தில், சென்னை காவல் ஆணையருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது
நெல்லையில் தாக்கப்பட்ட பெண் எஸ்.ஐ.க்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். காயமடைந்த பெண் எஸ்.ஐ. மார்கரெட் தெரசாவுக்கு உயர்தர சிகிச்சையளிக்கவும் ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மத்திய தொகுப்பில் மின்சாரம் கிடைக்கவில்லை என்பதை கூறாமல் தீர்வு காண வேண்டியது தமிழக அரசின் கடமை என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்
அரசியல் சாசன வரைவு பணியில் ஏராளமான தமிழர்கள் பங்கேற்றுள்ளனர். சமூக உண்மையை நீதிபதிகள் உணர்ந்திருக்க வேண்டும் சென்னை வழக்கறிஞர்கள் நீதித்துறையை வலுப்படுத்தும் பணிகளில் முக்கிய பங்காற்றுகின்றனர் வழக்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறியுள்ளார்
உயர்நீதிமன்றத்தில் உள்ளூர் மொழிகளை பயன்படுத்துவதில் சில சிக்கல்கள் உள்ளன. நீதிபதியாக வர பகுதி, இனம், மொழி உள்ளிட்ட எவையும் தடையாக இருக்க கூடாது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறியுள்ளார்.
மேலும் தொழில்நுட்ப வசதிகள் மூலம் மாநில மொழிகளை பயன்படுத்துவது குறித்து ஆய்வு செய்யப்படும் என்று கூறியுள்ளார்
கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
சேமநல நிதி ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக அதிகரிக்கப்படும் திருவண்ணாமலை, திருவாரூரில் கீழமை நீதிமன்றங்கள் அமைக்கப்படும் வாடகை கட்டடத்தில் இயங்கும் நீதிமன்றங்களுக்கு கட்டடம் கட்டப்படும் உயர் நீதிமன்ற நீதிபதிகள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை உறுதி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சட்டத்தின் குரலாக மட்டுமல்லாமல் மக்களின் குரலாகவும் தலைமை நீதிபதிகள் விளங்குகின்றனர். நாம் அருமையான நீதித்துறையை கொண்டிருக்கிறோம். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி’ நீதித்துறைக்கு சிறப்பான பங்களிப்பை வழங்குகிறார் – முதல்வர் மு.க ஸ்டாலின்
ராமஜெயம் கொலை வழக்கு – குற்றவாளிகள் குறித்து தகவல் தருபவர்களுக்கு ரூ. 50 லட்சம் வெகுமதி தரப்படும் என சிறப்பு புலனாய்வு குழு எஸ்.பி ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.
ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட்-க்கு 100% அபராதம், உதவி பயிற்சியாளர் பிரவின் ஆம்ரே ஒரு போட்டியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லையில் பெண் காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்திய ஆறுமுகம் என்பவர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின், பெண் எஸ்.ஐ. மார்கரெட் தெரசாவிடம் தொலைபேசியில் நலம் விசாரித்தார். மேலும் அவருக்கு உயர் மருத்துவ சிகிச்சை வழங்கவும் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில், புதிய நிர்வாக கட்டட அடிக்கல் நாட்டு விழாவில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றனர். புதிய நீதிமன்ற கட்டடங்கள் நீதி பரிபாலனத்துக்கு உதவியாக இருக்கும். நீதிமன்றங்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை வழங்கியுள்ளதாகவும் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி’ தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்தார்.
தேசிய பஞ்சாயத்து ராஜ் தின விழாவில் பங்கேற்க, பிரதமர் மோடி நாளை ஜம்மு காஷ்மீர் பயணம் செய்கிறார். ரூ.20,000 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு நேரம், 3 மணி நேரத்திலிருந்து, 2 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.
தினசரி கொரோனா பரிசோதனையை 18 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரமாக அதிகரிக்க சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில், உருமாறிய XE வைரஸ் பாதிப்பு இதுவரை கண்டறியப்படவில்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ112 குறைந்து ரூ39 ஆயிரத்து 560க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ14 குறைந்து ரூ4945க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஏற்கனவே 30 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று மேலும் 25 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி. நோய் பாதிப்பு அதிகரித்தாலும் பரிசோதனைக்கு ஏற்ப நோய் பரவல் விகிதம் குறைவு என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மின்வெட்டு விவகாரத்தில் திமுக அரசின் நடவடிக்கை கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பது போல் உள்ளது. கோடையில் மின்பயன்பாடு அதிகரிக்கும் என்ற நிலையில், அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தெரிவித்தார்.
இந்தியாவில் மேலும் 2,527 பேருக்கு கொரோனா தொற்று. நேற்றைய பாதிப்பு 2,451 ஆக இருந்த நிலையில், இன்று 2,527ஆக அதிகரிப்பு. நாடு முழுவதும் 15,079 பேர் சிகிச்சையில் உள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தகவல்
வெப்பச்சலனம் காரணமாக திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், புதுக்கோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் வரும் 28ம் தேதி உக்ரைன் செல்கிறார். தலைநகர் கீவ்-வில் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கியை சந்தித்து பேசவுள்ளார். ரஷ்யாவில் அடுத்த வாரம் அதிபர் புதினை சந்தித்த பிறகு ஆன்டனியோ குட்டரெஸ் உக்ரைன் செல்கிறார்
இந்திய மாணவர்கள் பாகிஸ்தானில் தங்கள் உயர்கல்வியை பயில வேண்டாம் என அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் மற்றும் பல்கலை. மானியக் குழு கூட்டாக அறிவிப்பு. பாகிஸ்தானில் பெற்ற கல்வி மூலம் இந்தியாவில் வேலை வாய்ப்பை பெற முடியாது என்றும், மேற்படிப்பை தொடர முடியாது எனவு குறிப்பிட்டுள்ளது.