தனுஷுடனான பிரிவிற்கு பின்னர் சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
. தினமும் ஏதாவது ஒரு பதிவு பகிர்ந்து டிரெண்டிங்கில் இடம்பெறும் ஐஸ்வர்யா, தற்போது தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ள பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய சினிமாவில் பிரபல நடிகராக திகழும் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தனுஷுக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் பரஸ்பரம் பிரிய உள்ளதாக அண்மையில் அறிவித்தது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது.
விவாகரத்து அறிவிப்பிற்கு பின் தன்னுடைய கெரியர் சமப்ந்தமான வேளைகளில் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார் ஐஸ்வர்யா. அதே போல் தனுஷும் தனது அடுத்தடுத்த படங்களில் பிசியாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே வருவேன்’ படத்தில் நடித்து வருகிறார். அதே போல் தமிழ், தெலுங்கு மொழியில் உருவாகும் ‘வாத்தி’ படத்திலும் நடித்து வருகிறார்.
சூர்யா படத்தை கன்பார்ம் பண்ணிய சுதா கொங்கரா: ஆனா ‘அது’ உண்மை இல்லை.!
இந்நிலையில் ஐஸ்வர்யா தனது சமூக வலைத்தள பக்கத்தில் உலக புத்தக தினத்தை முன்னிட்டு புதிய புத்தகம் ஒன்றை படிக்க துவங்கியுள்ளதாக பதிவிட்டுள்ளார். மேலும் ஞாயிற்றுக்கிழமையை உடற்பயிற்சியுடன் துவங்குவதாக தனது வொர்க் அவுட் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அண்மைகாலமாக உலக ஹெல்த் டே, உலக பூமி நாள் என அனைத்தையும் கொண்டாடி வருகிறார் ஐஸ்வர்யா.
சென்னையில் அதிகரிக்கும் கொரோனா: அமைச்சர் சூப்பர் திட்டம்!
தனுஷை பிரிய முடிவு செய்திருப்பதாக போட்ட போஸ்டிற்கு பிறகு சோஷியல் மீடியா பக்கமோ தலை காட்டாமல் இருந்த ஐஸ்வர்யா, தற்போது அன்றாடம் தான் செய்யக்கூடிய சின்னசின்ன வேலைகளையும் பதிவாக பகிர்ந்து வருகிறார். ஐஸ்வர்யா மறைமுகமாக தனுஷுக்கு சேதி சொல்வதற்காகவும், தான் மகிழ்ச்சியாக இருப்பதாக காட்டிக் கொள்வதற்காகவுமே அவர் இப்படியெல்லாம் செய்வதாக பலர் விமர்சித்து வருகின்றனர்.