வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்தமிழகம், டெல்டா மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள், கோவை, நீலகிரி, திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, ஈரோடு ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மாவட்டங்கள் கன்னியாகுமரி, நெல்லை, டெல்டா மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்தி: “என் மரணம் தான் உன் திருமண பரிசு”- காதலிக்கு எழுதிவிட்டு காதலன் எடுத்த பகீர் முடிவுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM