கிரகங்களின் ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அடுத்த 10 வருட கிரகப் பயணங்களை வடிவமைக்கும் புதிய அறிக்கையில், செவ்வாய், யுரேனஸ் மற்றும் சனியின் நிலவான என்செலடஸ் முதலிடம் பிடித்துள்ளன.
அமெரிக்க விஞ்ஞானிகள் அடுத்ததாக செவ்வாய், யுரேனஸ், சனியை சுற்றிவரும் என்செலடஸ் ஆகியவற்றை அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வு செய்யவுள்ளனர்.
இந்த அறிக்கை கிரக அறிவியல் மற்றும் வானியல் உயிரியலுக்கான சமீபத்திய ஆய்வாகும். ஒவ்வொரு 10 வருடங்களுக்கும், தேசிய அறிவியல், பொறியியல் மற்றும் மருத்துவ அகாடமிகளால் கூட்டப்படும் வல்லுநர்கள், துறையின் நிலையைப் பார்த்து, அடுத்த பத்தாண்டுக்கான ஆய்வுக்கான பரிந்துரைக்கப்பட்ட முன்னுரிமைகளின் பட்டியலைத் தொகுக்கிறார்கள்.
உங்க Smart Phone சூடாவதை தடுக்கனுமா? – இந்த 5 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க!
2023 முதல் 2032 வரையிலான புதிய கணக்கெடுப்பு, NASA, நேஷனல் சயின்ஸ் ஃபவுண்டேஷன் மற்றும் பிறரால் எந்தெந்தத் திட்டங்கள் தொடரப்பட்டு நிதியளிக்கப்படுகின்றன என்பதை வழிகாட்ட உதவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil