இடைக்கால அரசு அமைக்க இலங்கை பிரதமர் மறுப்பு| Dinamalar

கொழும்பு : இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதையடுத்து, அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே இருவரும் பதவி விலகக் கோரியும், தற்போதைய அரசை கலைத்து விட்டு அனைத்து கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசு அமைக்கவும் கோரி, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து மகிந்த ராஜபக்சே கூறியதாவது:
மாறுபட்ட கொள்கைகளுடன் இருப்பவர்கள், நேருக்கு நேர் பார்க்கக் கூட விரும்பாதவர்கள் ஒன்றுசேர்ந்து இடைக்கால அரசு அமைத்தால் என்ன பலன் இருக்கும். அவர்களிடம் ஒருமித்த கருத்து ஏற்பட வாய்ப்பில்லை. ஒருவேளை இடைக்கால அரசு தேவையெனில் அது என் தலைமையில் தான் அமையும். மக்கள் பொருளாதார நெருக்கடியை சகித்துக் கொண்டு பொறுமை காக்க வேண்டும். அரசுடன் பேச்சு நடத்த விரும்பவில்லையெனில் தொடர்ந்து போராடட்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.