கொழும்பு,
இலங்கையில் நிலவரும் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது.
இந்நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இருந்து கண்டன ஆர்ப்பாட்டம் தொடங்கியது. இதில், நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று, அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். அப்போது, போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆட்டோ ஓட்டுநர்களும் பங்கேற்று ஊர்வலமாக சென்றனர்.
அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிராகவும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கு பதில் சொல் என்றும் அவர்கள் பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர். போராட்டத்தில், மதகுருமார்கள், வடமாகான சபையின் முன்னாள் அமைச்சர் சிவனேசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு ஊர்வலம் சென்றனர்.