‘மோடியும் அம்பேத்கரும்’ என பெயரிடப்பட்ட புத்தகம் கடந்த 14 ஆம் தேதி வெளியிடப்பட்டது. தமிழ் சினிமா ரசிகர்களால் இசைஞானி என கொண்டாடப்படும்
இளையராஜா
இந்த புத்தகத்திற்கு முன்னுரை எழுத்தியுள்ளார். இந்த விவாகாரம் தான் தற்போது சோஷியல் மீடியாவில் மிகப்பெரிய பரபரப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
‘மோடியும் அம்பேத்கரும்’ புத்தகத்தில், “பிரதமர்
மோடி
தலைமையிலான அரசின் நிர்வாகத்தினால், நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. மோடியின் ஆட்சியை பார்த்தால் அம்பேத்கரே பெருமைப்படுவார். அம்பேத்கரின் சிந்தனைகளை அடிப்படையாக கொண்டு மோடி ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக குறிப்பிட்டிருந்தார் இளையராஜா.
டாக்டர் அண்ணல் அம்பேத்கருடன் பிரதமர் மோடியை ஒப்பிடுவது தவறானது எனவும், முரணானது எனவும் பலரும் சமூக வலைதளங்களில் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அதேசமயம் இளையராஜாவின் கருத்துக்கு ஆதரவாக பாஜகாவை சேர்ந்த சிலரும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
வில்லங்கமான கேள்வியால் மடக்கி பிடித்த பத்திரிக்கையாளர்: நஸ்ரியாவின் தரமான பதில்.!
இந்நிலையில் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய இயக்குநர் பா.ரஞ்சித் தமிழகத்தில் உள்ள சினிமா கலைஞர்களை கைப்பற்ற பாஜக மிகத் தீவிரமாக முயற்சி செய்வதாக விமர்சித்தார். இது தொடர்பாக அவர் பேசும் போது, ‘திடீரென இளையராஜாவை பாஜகவும், இந்துத்துவ சக்திகளும் கைப்பற்ற துடிப்பது சந்தேகத்தை எழுப்புகிறது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும் என தெரிவிக்கின்றார்.
இவற்றை எல்லாம் ஒப்பிட்டு பார்த்தால் தமிழ்நாட்டில் ஜாதி, மதத்திற்கு எதிராக ஒரு மாடல் உருவாகி வருகிறது. அதனை, இளையராஜாவை வைத்து உடைக்கும் முயற்சியில் பாஜகவினர் ஈடுபட்டுள்ளனர். இதனை மிகக் கவனமாக நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அதேநேரம் கலைஞர்கள் சமூக பொறுப்புடன் இருக்க வேண்டும் என நான் நினைக்கின்றேன்’. இவ்வாறு தெரிவித்துள்ளார் பா.ரஞ்சித்.
“மாமனிதன்” சஸ்பென்ஸ் உடைக்கும் சீனுராமசாமி!