4 நாட்களுக்கு போர் நிறுத்தம் மேற்கொள்ளுமாறு ஐக்கிய நாடுகள் சார்பில் அறிவுறுத்தப்பட்ட போதும், உக்ரைன் நாட்டின் டானட்ஸ்க் நகர் மீது ரஷ்ய படைகள் பீரங்கி தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளன.
ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள உக்ரைனில், ஞாயிற்றுகிழமை ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுவதால், 4 நாட்களுக்கு போர் நிறுத்தம் அறிவித்து மனிதாபிமான வழித்தடங்களை திறந்து விடுமாறு ஐ.நா பொதுச்செயலாளர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இருந்தபோதும் டான்பஸ் பகுதியில் உள்ள வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகங்களை கைப்பற்றும் முனைப்பில் ரஷ்ய ராணுவம் அங்கு தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது.
8 ஆண்டுகளாக அங்கு உக்ரைன் ராணுவம் அமைத்துள்ள அரண்கள் மீது ரஷ்ய படைகள், 1945-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஹவிட்சர் பிரங்கிகளால் தாக்குதல் நிகழ்த்தி வருகின்றன.