அமெரிக்காவின் உத்தா மாகாணத்தில் இயங்கி வருகிறது வெஸ்ட்மின்ஸ்டர் எனும் தனியார் கல்லூரி. இந்த கல்லூரியில் ‘போர்னோகிராஃபி’ குறித்த பட்டப்படிப்பு நடப்பு கல்வியாண்டு முதல் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த படிப்பின் சிலபஸ் உள்ளிட்டவை குறித்த விவரங்கள் கல்லூரியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, மாணவர்கள் ஆபாசப் படங்களை ஒன்றாகப் பார்க்கலாம். அத்துடன் பாலியல் பண்புகள் பற்றியும், தீவிர கலை வடிவம் சார்ந்த விஷயங்கள் குறித்தும் அவர்கள்ஆலோசனை மேற்கொள்ளலாம்.
கல்லூரி மாணவர்களின் விருப்பம் சார்ந்து வழங்கப்படும் இந்த பாடத்திட்டமானது சமூக விஷயங்களை ஆய்வு செய்வதற்கான வாய்ப்பை வழங்குவதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் பாலியல் ரீதியான குற்றங்களில் ஈடுபடுவதை மாணவர்கள் தவிர்ப்பது குறித்து ஆக்கபூர்வமாக முடிவினை எடுக்க இந்த படிப்பு உதவும் என்றும் கல்லூரி நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
யப்பா.. ஒரே கம்பெனியில இவ்வளவு வருஷம் வேலையா?- உண்மையில இது சாதனைதான்!
இந்த பாடத்திட்டம் புதிதாக கொண்டு வரப்பட்டதல்ல; கடந்த காலங்களில் பலமுறை வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக இடையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இந்த படிப்பு, தற்போது மீண்டும் வழங்கப்படுகிறது. வழக்கமாக இந்த பாடப்பிரிவில் 20 மாணவர்கள் வரை சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர் என்று கல்லூரி நிர்வாகம் அசால்டாக கூறியுள்ளது.
இந்த படிப்பில் செய்முறை வகுப்புகள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து கல்லூரி தரப்பில் வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.