காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்ததால் விரக்தி அடைந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சத்தீஸ்கர் மாநிலம் பலோட் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், அதே மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், இளைஞர் காதலித்த பெண்ணுக்கு சமீபத்தில் வேறு ஒருவருடன் திருமணம் நடந்து முடிந்து உள்ளது. இதையறிந்த அந்த இளைஞர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். காதலி பிரிந்து விட்டதாக தன்னுடைய வேதனையை நண்பர்களிடம் கூறி புலம்பி வந்துள்ளார்.
சம்பவத்தன்று அந்த இளைஞர் தன் அறையின் சுவரில், “என் மரணம் உனது திருமணப் பரிசு, ஐ லவ் யூ” என்று எழுதிவைத்துவிட்டு, கழுத்தில் தூக்குக்கயிறு மாட்டிக்கொண்டு அதனை வீடியோவாக எடுத்து வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். அதன்பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் பார்த்த அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதை அறிந்த போலீசார் இளைஞர் தங்கியிருந்த வீட்டிற்கு சென்று, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து பலோட் டிஎஸ்பி பிரதீக் சதுர்வேதி கூறுகையில், ”வாட்ஸ்அப்பில் அந்த நபர் பதிவேற்றிய வீடியோ குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கூடுதல் விவரங்கள் கிடைத்தவுடன் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இதையும் படிக்கலாம்: ‘எனது மனைவி பிரிய நீ தான் காரணம்’- மூதாட்டியை கொலை செய்த ராணுவ வீரர்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM