எல்லை தாண்டி தாக்க இந்தியா தயங்காது – பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் மறைமுக எச்சரிக்கை

இந்தியாவை குறிவைத்து தாக்குதல் நடத்தினால் எல்லை தாண்டி சென்று தாக்க தயங்கமாட்டோம் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாகிஸ்தானுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்தார்.
1971-ம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் போரில் பங்கேற்ற ராணுவ வீரர்களை கவுரவிக்கும் விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு ராஜ்நாத் சிங் பேசியதாவது:
இந்தியாவில் இருந்து தீவிரவாதத்தை முழுமையாக வேரறுக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. இதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. எந்த ரூபத்தில் பயங்கரவாதம் வந்தாலும் அதனை இந்தியா சகித்துக் கொள்ளாது. தீவிரவாதம் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்படும் என்பதை உலகுக்கு இந்தியா உரக்க சொல்லி வருகிறது.
image
நாட்டின் கிழக்கு எல்லையில் (வங்கதேசம்) தற்போது அச்சுறுத்தல் முற்றிலுமாக குறைந்துள்ளது. ஊடுருவல்களும் நிறுத்தப்பட்டுவிட்டன. வங்கதேசம் நட்பு நாடாக மாறியுள்ளதால் கிழக்கு எல்லை அமைதி பூங்காவாக மாறியிருக்கிறது. ஆனால், மேற்கு எல்லையில் (பாகிஸ்தான்) தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. அதனை இந்தியா தொடர்ந்து கண்காணித்தும், தேவைப்பட்டால் பதிலடி கொடுத்தும் வருகிறது. எல்லைக்கு அப்பால் இருந்து இந்தியாவை குறிவைத்து யாரேனும் தாக்குதல் நடத்தினால், எல்லைத் தாண்டி சென்று பதிலடி கொடுக்க இந்தியா தயங்காது. இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.