- ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் இணைவதற்கு ஆஸ்திரியா எதிர்ப்பு.
-
ஆஸ்திரியா நிலைபாடு பெரும் ஏமாற்றமாக இருப்பதாக உக்ரைன் அறிவிப்பு.
ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் இணைவதற்கு ஆஸ்திரியா எதிர்ப்பு தெரிவித்து இருப்பது பெரும் ஏமாற்றமாக இருப்பதாக உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் நோட்டோ கூட்டமைப்பில் இணைவதற்கும், ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாக மாறுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை ரஷ்யா முன்னெடுத்தது.
இரண்டு மாதகால ரஷ்யாவின் இந்த போர் நடவடிக்கைகையில் நோட்டோ கூட்டமைப்பில் இணையும் திட்டத்தை கைவிட்ட உக்ரைன், ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாகும் திட்டத்தை தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.
இதற்காக ஐரோப்பிய ஒன்றிய சபையில் விண்ணப்பித்து இருக்கும் உக்ரைனுக்கு பெருவாரியான அதன் உறுப்பு நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. ஆனால் ஒன்றியத்தில் உக்ரைன் இணைவதற்கு அதன் முக்கிய உறுப்பு நாடான ஆஸ்திரியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாக இணைவதற்கு ஆஸ்திரியா எதிர்ப்பு தெரிவித்து இருப்பது தங்களுக்கு பெரும் ஏமாற்றமாக இருப்பதாக உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் இதுபோன்ற அறிக்கைகள், ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய நாடுகளின் பெரும்பான்மையான மக்கள் உக்ரைனை ஆதரிக்கின்றன என்ற
உண்மையை புறக்கணிக்கிறது என வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: போர் களத்திற்கு திரும்பும் உக்ரைனின் காயப்பட்ட சிங்கங்கள்: பாதுகாப்பு அமைச்சகம் தகவல்!
[
ஆஸ்திரியாவின் வெளியுறவு அமைச்சர் அலெக்சாண்டர் ஷால்லென்பெர்க் உக்ரைன் வேட்பாளர் அந்தஸ்தைப் பெறக்கூடாது என ஜுன் மாத தொடக்கத்தில் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்திக்கான வளம்: ட்விட்டர் The Kyiv Independent