ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தற்போது லீக் சுற்று ஆட்டங்கள் மும்பை மற்றும் புனேயில் நடந்து வருகிறது. லீக் முடிந்து பிளே-ஆப் சுற்று ஆட்டங்களை கொல்கத்தா மற்றும் ஆமதாபாத்தில் நடத்துவது என்று ஐ.பி.எல். உயர்மட்ட குழு கூட்டத்தில் நேற்று முடிவு செய்யப்பட்டது. இதன்படி இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று (மே 24-ந்தேதி), வெளியேற்றுதல் சுற்று (மே 26-ந்தேதி) கொல்கத்தா ஈடன் கார்டனிலும், இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்று (மே 27-ந்தேதி), இறுதிப்போட்டி (மே 29-ந்தேதி) ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்திலும் நடைபெறும்.
ஸ்டேடியம் முழுமையாக நிரம்பும் வகையில் 100 சதவீதம் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்த இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி, பெண்களுக்கான சேலஞ்சர் கோப்பை போட்டி மே 24-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை லக்னோவில் நடத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.