கிட்டத்தட்ட உறுதியான தலைவர் 170 ? யாரும் எதிர்பாராத கூட்டணி..!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்திற்கு பிறகு இனி படங்களில் நடிப்பாரா இல்லையா என்ற கேள்வி ரசிகர்களிடம் இருந்து வந்தது. ஏனென்றால்
ரஜினி
நடிப்பில் வெளியான சமீபத்திய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. மேலும் அவரின் வயதையும் உடல்நலனையும் கருத்தில் கொண்டு ரசிகர்கள் இக்கேள்வியை கேட்டுவந்தனர்.

இந்த கேள்விகளுக்கெல்லாம் ரஜினி பதிலளிக்கும் வகையில் தன் அடுத்த படத்தின் அறிவிப்பை ப்ரோமோவின் மூலம் வெளியிட்டார். ரஜினியின் 169 ஆவது படத்தை இயக்கப்போவதாக பல இயக்குனர்களின் பெயர்கள் அடிபட்டது.

என்ன இருந்தாலும் KGF படத்தால் அது மட்டும் முடியாது..உண்மையை உடைத்த பிரபலம்..!

இருப்பினும் யாரும் எதிர்பார்க்காத வகையில் ரஜினி மற்றும்
நெல்சன்
கூட்டணி அமைய இது ரசிகர்களுக்கு சற்று ஆச்சரியமாகவே இருந்தது. சன் பிக்சர்ஸ் தயாரிக்க இப்படத்திற்கு
அனிருத்
இசையமைக்கவுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ள நிலையில் ரஜினியின் அடுத்த படமான தலைவர் 170 படத்தின் அறிவிப்பை ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டுள்ளனர்.

இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள்..

சில மாதங்களுக்கு முன்பு ரஜினியின் 170 ஆவது படத்தை
அருண் ராஜா காமராஜ்
இயக்கவுள்ளதாக தகவல்கள் வந்தன. மேலும் இப்படத்தை பிரபல தயாரிப்பாளரான
போனி கபூர்
தயாரிக்கப்போவதாகவும் பேசப்பட்டது. ஆனால் இதை போனி கபூர் மறுத்தார்.இந்நிலையில் தற்போது மீண்டும் இந்த தகவல் இணையத்தில் வைரலாகிவருகின்றது.

அதாவது ரஜினியை அருண் ராஜா காமராஜ் இயக்கப்போவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாம். விரைவில் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல்கள் வருகின்றன. கனா படத்தின் மூலம் இயக்குனராக வெற்றிகண்ட அருண் ராஜா காமராஜ் தற்போது உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி படத்தை இயக்கியுள்ளார். இப்படம் மே மாதம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

விமலென்ன : விஜய்யா? விஜய்சேதுபதியா? – வெளுத்தெடுத்த தயாரிப்பாளர்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.