இத்தாலியில் நேற்று 70 ஆயிரத்து 520 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியது. 143 பேர் உயிரிழந்தனர்.
2020 பிப்ரவரிக்குப் பிறகு கோவிட் பாதிப்பால் ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 609 பேர் உயிரிழந்ததாக இத்தாலியின் எண்ணிக்கை பதிவாகியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் பிரிட்டனை அடுத்து இரண்டாவது மிகப்பெரிய எண்ணிக்கை இதுவாகும்.
தொற்று பரவல் எண்ணிக்கை அதிகரித்த போதும் உயிரிழப்பின் தினசரி எண்ணிக்கை 202 ல் இருந்து 143 ஆகக் குறைந்ததாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.