வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புனே: ‘ஒமைக்ரான்’ வகை கொரோனா தொற்றை செயலிழக்க செய்யும் திறன், ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியில் குறைவாக இருப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது.
உருமாறிய வகை கொரோனா தொற்றுகளின் மீது, ‘கோவிஷீல்டு’ மற்றும், ‘கோவாக்சின்’ தடுப்பூசிகளின் செயல்பாடுகள் குறித்து, ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் தேசிய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் என்.ஐ.வி., எனப்படும் தேசிய தொற்று நோயியல் துறை ஆய்வு நடத்தின. இதில், ‘ஒமைக்ரான்’ வகை தொற்றின் மீது, ‘கோவாக்சின்’ செயல்திறன் குறைவாக இருப்பது சமீபத்தில் தெரியவந்தது.
அதே போல, கொரோனா தொற்றினால் பாதிக்கப்படாதவர்கள், இரு டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டிருந்தாலும், அவர்களை உருமாறிய, ‘ஒமைக்ரான்’ வகை தொற்று தாக்கும் போது, தடுப்பூசியின் செயல்திறன் குறைவதாக, ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. அதே நேரத்தில், ஏற்கனவே தொற்றினால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் உடலில், ‘ஒமைக்ரான்’ வகைக்கு எதிராக தடுப்பூசி சிறப்பாக செயல்படுவது தெரியவந்துள்ளது.
Advertisement