மும்பை
சச்சின் தெண்டுல்கர் பெயர் அனைத்தையும் சொல்கிறது. கிரிக்கெட்டின் கடவுள், மாஸ்டர் பிளாஸ்டர், கிரிக்கெட் லிஜண்ட் கிரிக்கெட் உலகில் அவரது அசாதாரண செயல்திறனுக்காக வழங்கப்பட்ட தலைப்புகளில் சில மட்டுமே. சச்சின் 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலும் ஓய்வு பெற்றார். கிரிக்கெட்டின் கடவுளுக்கு இன்று 49 வயதாகிறது.
சச்சின் தெண்டுல்கர் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் விளையாட்டு வீரர்கள் முக்கிய பிரமுகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
சச்சின் தெண்டுல்கரின் 45-வது பிறந்த நாளைமுன்னிட்டு அவர் குறித்த சில சுவாரசியமான தகவல்களை நாம் தெரிந்து கொள்வோம்.
* 1987 உலகக் கோப்பையில் சச்சின் வாங்கடே ஸ்டேடியத்தில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வேக்கு இடையே நடந்த போட்டியில் ஒரு பந்து எடுத்துபோடும் சிறுவனாக இருந்தார். அப்போது அவருக்கு வயது 14.
* சச்சின் டெண்டுல்கர் 1988 ல் பிரபுர்ன் ஸ்டேடியத்தில் இந்தியா- பாகிஸ்தான் ஒருநாள் பயிற்சி ஆட்டத்தில் சப்ஸ்சுடியுட்டாக பீலிடிங் செய்தார்.
* சச்சின் டெண்டுல்கர் மூன்றாவது நடுவர் மூலம் அவுட் வழங்கப்பட்ட முதல் சர்வதேச வீரர் ஆவார். 1992 ஆம் ஆண்டில், டர்பன் டெஸ்டின் இரண்டாவது நாளில் ஜான்டி ரோட்ஸ், டெண்டுல்கருக்குக் கிரிசுக்கு வெளியே இருந்த போது பந்தை வீசினார் . டிவி ரீப்ளேகளைப் பார்த்த பிறகு அவர் அவுட் வழங்கினார். தென் ஆப்பிரிக்காவின் கார்ல் லிபன்பெர்க் இந்த ஆட்டத்தில் மூன்றாவது நடுவர்.
* 19 வயதில், சச்சின் டெண்டுல்கர் கவுண்டி கிரிக்கெட் விளையடிய இளம் இந்தியராக ஆனார்.
* டென்னிஸ் பந்து கிரிக்கெட் அவருக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டாகும். மழைக்காலங்களில் அவர் அதை விளையாடுவார்.
* சச்சினை ’பாபா மோஷை’ என்று கங்குலி அழைத்தால், ‘சோட்டா பாபு’ என்று சச்சின் கங்குலியை அழைப்பார்.
* ரஞ்சி, துலீப் மற்றும் இரானி டிராபி போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் தனது முதல் ஆட்டங்களில் சதம் அடித்து உள்ளார்.
* சச்சின் டெண்டுல்கர் வாசனை திரவியங்கள் மற்றும் கடிகாரங்கள் சேகரிக்கும் பழக்கம் உடையவர்.
*சச்சினுக்கு அஞ்சலி என்ற மனைவியும் அர்ஜுன் என்ற மகனும் சாரா என்ற மகளும் உள்ளனர்.
* சச்சின் டெண்டுல்கர் ஏற்றுக் கொண்ட முதல் பிராண்ட் விளம்பரம் ‘பூஸ்ட்’ ஆகும். அவர் பல விளம்பர படங்களில் கபில்தேவுடன் இணைந்து நடித்தார், இது 1990 ஆம் ஆண்டில் நடந்தது.
*சச்சின் டெண்டுல்கருக்கு 2013ஆம் ஆண்டு இந்தியாவில் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இதன்மூலம் மிக இள வயதில் இந்த விருதைப் பெற்றவர் என்ற சாதனையையும், விளையாட்டு வீரர்களில் இந்த விருதினைப் பெறும் முதல் வீரர் எனும் சாதனைகளைப் படைத்தார்.
*2019ஆம் ஆண்டு ஐசிசியின் ஹால் ஆஃப் பேம் பட்டியலில் இடம் பெற்றார்.
*சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்களை அடித்த ஒரே வீரர் சச்சின் ஆவார். அதே போல் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரரும் இவரே. இந்த இரண்டு சாதனைகளையும் முறியடிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று என்று கிரிக்கெட் விமர்சகர்களால் கூறப்படுகிறது.
*2010 பிப்ரவரி 24, குவாலியரில், தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஆட்டமிழக்காமல் 200 (147) ரன்கள் எடுத்து சாதனை ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.
*உலகின் தலை சிறந்த மட்டையாளரும் ஆஸ்திரேலியருமான சர் டான் பிராட்மன் சச்சினின் ஆட்டம் தன்னுடைய ஆட்டத்தைப் போன்றே இருப்பதாகக் கூறியுள்ளார்; பிராட்மேனின் மனைவியாகிய ஜெசியும் அதை ஒப்புக் கொண்டுள்ளார்.
*ஆஸ்திரேலிய சுழல்பந்து வீச்சாளர் ஷேன் வோர்ன் தனது புத்தகத்தில் உலகின் தலை சிறந்த வீரர்களின் பட்டியலில் சச்சினுக்கு முதலிடம் கொடுத்து கவுரவித்துள்ளார்.