புதுடில்லி : நாட்டில் சமையல் எண்ணெய் விலை அதிகரித்துள்ள நிலையில், ‘பாமாயில்’ எற்றுமதியை தடை செய்ய, இந்தோனேசியா அரசு முடிவு செய்துள்ளதால், அவற்றின் விலை மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது
கிழக்கு ஐரோபிய நாடான உக்ரைன், விவசாய உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடுகளில் ஒன்று. குறிப்பாக, சமையல் எண்ணெய் உற்பத்தியில் உக்ரைன் முன்னணி வகிக்கிறது. இந்நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால், அந்நாட்டில் விவசாய உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. உக்ரைனிலிருந்து சமையல் எண்ணெய் உட்பட விவசாய பொருட்களின் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியா உட்பட பல நாடுகளில், சமையல் எண்ணெய் மற்றும் பல உணவு பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.
இதற்கிடையே, நாம் பாமாயிலை இந்தோனேசியாவில் இருந்து அதிகளவில் இறக்குமதி செய்து வருகிறோம். இங்கு, சமையல் எண்ணெய் விலை உயர்வை தடுக்கும் நோக்கிலும், கையிருப்பை பாதுகாக்கும் நோக்கிலும், பாமாயில் ஏற்றுமதியை, ௨௮ம் தேதி முதல் நிறுத்த, இந்தோனேசியா அரசு முடிவு செய்துள்ளது. ரஷ்யா – உக்ரனை் போர் முடியும் வரை, இந்த தடை நீடிக்க வாய்ப்பு உள்ளது.
இதையடுத்து இந்தியாவில் உணவு பொருட்கள் விலை ஏற்கனவே அதிகரித்துள்ள நிலையில், பாமாயில் இறக்குமதி பாதிக்கப்பட்டால், சமையல் எண்ணெய்களின் விலை உச்சத்தை தொடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Advertisement