ரஷ்ய துருப்புகளால் முற்றுகையிடப்பட்டுள்ள மரியுபோல் நகரில் சாவின் விளிம்பில் இருக்கும் உக்ரேனிய மக்களுடன் 20கும் மேற்பட்ட பிரித்தானிய வீரர்களும் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரேனின் மரியுபோல் நகரம் ரஷ்யாவின் பிடியில் சிக்கியுள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது.
Azovstal இரும்பு தொழிற்சாலையில் தற்போது உக்ரேனிய வீரர்கள் பலருடன், சிறார்கள், பிஞ்சு குழந்தைகளுடன் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் சிக்கியுள்ளனர்.
உணவு, தண்ணீர், மருந்து என ஏதுமின்றி சாவின் விளிம்பில் தள்ளப்பட்டுள்ள அவர்களுடன் பிரித்தானிய வீரர்களும் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யா மற்றும் உக்ரேனிய மக்கள் ஆர்த்தடாக்ஸ் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிவரும் நிலையில், பதுங்கு குழிகளில் சிக்கியுள்ள மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற உக்ரேன் தரப்பு முன்வைத்த மனிதாபிமான கோரிக்கையை ரஷ்யா நிராகரித்துள்ளதாகவே கூறப்படுகிறது.
மேலும், Azovstal இரும்பு தொழிற்சாலையில் இருந்து எவரும் வெளியேறாதபடி, வெளியில் இருந்து எவரும் உள்ளே நுழையாத வகையில் ரஷ்ய துருப்புகளால் குறித்த தொழிற்சாலை மூடப்பட்டுள்ளதாகவும்,
இதனால், குறித்த தொழிற்சாலையில் சிக்கியுள்ளவர்களை மரணத்திற்கு தள்ளும் கொடூர திட்டத்தை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வகுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மரியுபோல் நகரில் வசிக்கும் பிரித்தானியர்களில் பலர் உக்ரேன் இராணுவத்தில் தன்னார்வலர்களாக இணைந்து போரிட்டு வருகின்றனர்.
ரஷ்யாவிடம் ஒருபோதும் சரணடையப் போவதில்லை என Azovstal தொழிற்சாலையில் சிக்கியுள்ள உக்ரேனிய வீரர்கள் சூளுரைத்துள்ளனர்.
ரஷ்யாவிடம் சிக்கினால் கண்டிப்பாக கொடூர சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்படலாம் என அஞ்சுவதாகவே கூறப்படுகிறது.
ஆனால், உணவு மற்றும் தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் பற்றாக்குறை ரஷ்ய துருப்புகளால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
Azovstal தொழிற்சாலையில் சிக்கியுள்ள பிரித்தானிய வீரர்களில் பெரும்பாலானோர் முன்னாள் வீரர்கள் எனவும், சிலருக்கு உக்ரேனிய உறவினர்கள் இருப்பதாகவும் பிரித்தானிய தரப்பில் கூறப்படுகிறது.