தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களுள் ஒருவர்
சிவகார்த்திகேயன்
. தற்போது இவரின் படங்கள் உச்சநட்சத்திரங்களின் படங்களுக்கு இணையாக வசூல் செய்து வருகின்றது. இடையில் சில படங்கள் இவர் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் நெல்சனின் இயக்கத்தில் வெளியான டாக்டர் திரைப்படம் நூறு கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.
டாக்டர் படத்தின் வெற்றியின் மூலம் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ளார் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அடுத்ததாக
டான்
திரைப்படம் மே மாதம் வெளியாகவுள்ளது.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்
எஸ்.ஜெ.சூர்யா
முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
என்ன இருந்தாலும் KGF படத்தால் அது மட்டும் முடியாது..உண்மையை உடைத்த பிரபலம்..!
மேலும் அட்லீயின் உதவி இயக்குனரான
சிபி சக்கரவர்த்தி
இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்நிலையில் டான் படத்தை ஒரு குறும்படமாக எடுத்திருந்த சிபி சக்கரவர்த்தி அதை தளபதி விஜய்யிடம் போட்டு காண்பித்திருக்கிறார்.
டான்
இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள்
அப்படத்தை பார்த்த விஜய் சூப்பர் டா என்று சொன்னதாக சிபி சக்கரவர்த்தி சமீபத்தில் தெரிவித்துள்ளார். அட்லீயிடம் உதவி இயக்குனராக இருந்த சிபி சக்ரவர்த்தி தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களில் விஜய்யுடன் பணியாற்றிய போது அவருடன் சிபி சக்ரவர்திக்கு பழகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
டான்
அனிருத்தின் இசையில் டான் படத்திலிருந்து வெளியான பாடல்கள் அமோக வரவேற்பை பெற்றதாலும் ,சிவகார்த்திகேயனின் முந்தைய படமான டாக்டர் படத்தின் வெற்றியினால் டான் படத்தின் மீது ரசிகர்ளின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் படங்கள விட நல்ல படங்கள் ஓடுது Beast -ஐ கலாய்தாரா உதயநிதி?