வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: சீனாவை சேர்ந்தவர்களுக்கு சுற்றுலா விசா வழங்குவதை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக, சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் தனது உறுப்பினர்களுக்கு தகவல் அளித்துள்ளது.
கோவிட் பரவல் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு, சீனா பல்கலை.,களில் படித்த 22 ஆயிரம் இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பினர். ஆனால், திரும்பி செல்வதற்கு சீனா அனுமதி கொடுக்காததால், மாணவர்களால் படிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு கோரிக்கை விடுத்தும், சீனா காலம் தாழ்த்தி வருகிறது.
இந்நிலையில், சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் ஏப்.,20ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சீனர்களுக்கு அளிக்கப்பட்ட சுற்றுலா விசா இனி செல்லுபடியாகாது. பூடான், மாலத்தீவுகள், நேபாளம் ஆகிய நாடுகளை சேர்ந்த பயணிகள் மட்டுமே இந்தியாவிற்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்திய குடியிருப்பு அனுமதி அட்டை, இந்தியா வழங்கிய விசா மற்றும் இ விசா, வெளிநாடு வாழ் இந்தியர் அட்டை, இந்திய வம்சாவளி அட்டை, தூதரக கடவுச்சீட்டு ஆகியவற்றை வைத்துள்ள பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.10 ஆண்டுகளுக்கு மேல் செல்லுபடியாகும் சுற்றுலா விசா இனி செல்லாது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Advertisement