சீனர்களுக்கு சுற்றுலா விசா அளிப்பதை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி கொண்டதாக சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தியா எடுத்துள்ள நடவடிக்கை குறித்து சர்வதேச விமான போக்குவரத்து கூட்டமைப்பு (IATA) சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, சீன நாட்டினருக்கு வழங்கிய சுற்றுலா விசாக்கள் இனிமேல் செல்லுபடியாகாது என தெரிவித்து உள்ளது. பூடான், இந்தியா, மாலத்தீவுகள், நேபாளம் ஆகிய நாடுகளை சேர்ந்த பயணிகள் மட்டுமே இந்தியாவிற்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்திய குடியிருப்பு அனுமதி அட்டை, இந்தியா வழங்கிய விசா மற்றும் இ – விசா, வெளிநாடு வாழ் இந்தியர் அட்டை, இந்திய வம்சாவளி அட்டை, தூதரக பாஸ்போர்ட் ஆகியவற்றை வைத்துள்ள பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படவுள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோன்று, 10 ஆண்டுகள் செல்லுபடியாக கூடிய சுற்றுலா விசாக்களும் இனி செல்லுபடியாகாது என தெரிவித்து உள்ளது.
சீனப் பல்கலைக்கழகங்களில் படித்துவரும் கிட்டத்தட்ட 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள், அங்கு திரும்பி சென்று படிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். சீனாவிற்கு செல்ல அனுமதி அளிக்கும்படி மத்திய அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், சீனா அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்திவருகிறது. இதற்கு பதிலடியாக இந்தியா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாம்: எல்லை தாண்டி தாக்க இந்தியா தயங்காது – பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் மறைமுக எச்சரிக்கைSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM