டோக்கியோ:
ஜப்பானில் 24 பயணிகள், 2 ஊழியர்களுடன் சென்ற சுற்றுலாப் படகு நேற்று கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. ஹொகைடோவின் வடக்குத் தீவில் உள்ள ஷிரெடோகோ தீபகற்பத்தின் மேற்குக் கடற்கரை பகுதியில் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சுற்றுலாப் படகுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. தகவலறிந்து வ்ரைந்து சென்ற கடலோர காவல் படையினர் 8 ரோந்துப் படகுகளில் அப்பகுதியில் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ஜப்பானில் சுற்றுலா படகு மூழ்கிய விபத்தில் நேற்று 10 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன என கடலோர காவல் படை உயரதிகாரி தெரிவித்துள்ளார். அவர்களில் 7 பேர் ஆண்கள், 3 பேர் பெண்கள் என தெரிவித்துள்ளது.