சிவகார்த்திகேயன்
டாக்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது புது உத்வேகத்துடன் காணப்படுகின்றார். ஆரம்பத்தில் தொடர் வெற்றிகளை கொடுத்து முன்னேறி வந்த சிவகார்த்திகேயன் இடையில் சில தோல்வி படங்களினால் சற்று துவண்டு போனார்.
அந்த சமயத்தில் அவருக்கு கை கொடுத்து தூக்கிவிட்டது டாக்டர் திரைப்படம்.
நெல்சன்
இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான இப்படம் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதைத்தொடர்ந்து சிவார்த்திகேயன் sk20 என்ற படத்தில் அனுதீப் இயக்கத்தில் நடிக்கின்றார்.
வித்யாசமாக ப்ரொபோஸ் செய்த அஜித் ..அசந்துபோன ஷாலினி..!
தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தின் மூலம் நேரடி தெலுங்கு படத்தில் அறிமுகமாகிறார் சிவகார்த்திகேயன். இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள
டான்
திரைப்படம் மே மாதம் வெளியாகவுள்ளது.
இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள்
அறிமுக இயக்குனர்
சிபி சக்கரவர்த்தி
இயக்கியுள்ள இப்படத்தில்
எஸ்.ஜெ.சூர்யா
முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அனிருத்தின் இசையில் இப்படத்திலிருந்து வெளியான பாடல்கள் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
இதைத்தொடர்ந்து தற்போது இப்படத்தில் சிவகார்த்திகேயனின் கதாபாத்திரம் பற்றி ஒரு தகவல் வெளியாகிவுள்ளது. அதாவது டான் படத்தில் சிவகார்த்திகேயன் ப்ராங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.
கல்லூரி மாணவராக இருக்கும் சிவகார்த்திகேயன் இப்படத்தில் பிராங்க் வீடியோ பதிவிடும் இளைஞராக நடிப்பதாக தகவல் வந்துள்ளது. இத்தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் டான் படத்தில் நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது என பேசிவருவது குறிப்பிடத்தக்கது.
பாலிவுட்டில் தடம் பதிக்கிறாரா விஜய்? குஷியாகும் ரசிகர்கள்