புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று நாட்புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று நாட்டு மக்களிடையே அகில இந்திய வானொலி மூலம் ‘மனதின் குரல்‘ (மன்கிபாத்) என்ற நிகழ்ச்சி வழியாக உரையாற்றி வருகிறார்.
அந்தவகையில் இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றும் நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்றது.
அப்போது பேசிய பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர்களுக்கான அருங்காட்சியகத்தின் சிறப்பம்சம் குறித்து உரை நிகழ்த்தினார். மேலும் பேசிய அவர், கடந்த மார்ச் மாதத்தில் ரூ.10 லட்சம் கோடி வரை யூபிஐ டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நடந்துள்ளதாக அவர் கூறினார்.
சிறிய உணவகங்கள், பழக்கடைகளில் கூட டிஜிட்டல் பணிப்பரிவர்த்தனை செய்யப்படுவதாக கூடிய அவர், நாள் ஒன்றிற்கு நாட்டில் ரூ.20 ஆயிரம் கோடிக்கு ஆன்லைன் பணப்பரிவர்த்தனை நடைபெறுவதாக மோடி பெருமிதமடைந்தார்.