வடக்கு டெல்லியில் உள்ள ரயில்வே குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது
புது டெல்லி பிரதாப் நகர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள சப்ஜி மண்டியில் உள்ள ரயில்வே குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் இதுவரை யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

#WATCH | Delhi: Fire breaks out in Railway godown at sabzi mandi, near Pratap Nagar Metro Station. A total of 14 fire tenders rushed to the site. Fire has been brought under control: Delhi Fire Service

(Video source: Delhi Fire Service) pic.twitter.com/QIG2f0rV8T
— ANI (@ANI) April 24, 2022

டெல்லி தீயணைப்பு சேவையின் இயக்குனர் அதுல் கர்க் “பிரதாப் நகர் மெட்ரோ நிலையம் அருகே உள்ள சப்ஜி மண்டியில் உள்ள ரயில்வே குடோனில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து மாலை 4:25 மணியளவில் அழைப்பு வந்தது. மொத்தம் 14 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன” என்று தெரிவித்தார்.
தீ தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்பட்டு வருவதாகவும் தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM