தங்கம் விலையானது 2 வாரங்களுக்கு பிறகு வார இறுதியில் சற்று குறைந்து முடிவடைந்துள்ளது. இது அவுன்ஸூக்கு 2000 டாலர்களை தொட்டு, பிறகு 1929 டாலர்களாக சரிவினைக் கண்டு முடிவடைந்துள்ளது. இதே இந்திய சந்தையினை பொறுத்தவரையில் 10 கிராமுக்கு 52,264 ரூபாயினை தொட்டுள்ளது.
எனினும் நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்பே இருந்து வருகின்றது. ஆக இந்த குறைந்த விலையானது வாங்க சரியான இடமா?
கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்னென்ன? குறிப்பாக கொரோனா தாக்கம், சீனா, உக்ரைன் – ரஷ்யா பிரச்சனை, டாலர் மதிப்பு, பத்திர சந்தை என பலவும் கவனிக்க வேண்டிய விஷயங்களாக உள்ளன. இது குறித்து நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
5 நாளில் 20% ஏற்றம்.. இனியும் நல்ல லாபம் கொடுக்கலாம்.. நிபுணர்களின் அட்டகாசமான பரிந்துரை!
டாலர் மதிப்பு
தங்கம் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றான டாலரின் மதிப்பானது, மீடியம் டெர்மில் தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். டாலர் மதிப்பானது 101 என்ற நிலையில் இருக்கும் நிலையில், இது ஓவர்பாட் லெவலில் உள்ளது. ஆக டாலரின் மதிப்பில் ஏற்படும் சரிவானது, தங்கம் விலை அதிகரிக்க காரணமாக அமையலாம். ஆக டாலரின் மதிப்பீட்டினை முதலீட்டாளார்கள் கண்கானிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று ஐஐஎஃப்எல் துணைத் தலைவர் அனுஜ் குப்தா கூறியுள்ளார்.
அமெரிக்கா ஜிடிபி
வரவிருக்கும் வாரத்தில் அமெரிக்காவின் ஜிடிபி தரவானது வெளியாகவுள்ளது. ஆக ஜிடிபி தரவானது ஒரு வேளை ஏமாற்றம் அளிக்கும் விதமாக இருந்தால், மத்திய வங்கியின் வட்டி விகித நடவடிக்கை தள்ளி வைக்கப்படலாம். எனினும் பணவீக்கம் என்பது மிக மோசமான விஷயமாகவும் இருக்கலாம். ஆக இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலை அதிகரிக்க காரணமாக அமையலாம்.
பிரெஞ்ச் ஜனாதிபதி தேர்தல்
தற்போதைய பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தல் வரவிருக்கும் நிலையில், இது அரசியல் ரீதீயாக சில எதிர்மறை தாக்கங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் நடந்து வரும் நிலையில், இதுவும் பிரெஞ்சு கருத்துக் கணிப்பு முடிவுகள் மிக முக்கியமானவை. ஆக இதுவும் தங்கம் விலையில் உடனடியாக தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
ரஷ்யா – உக்ரைன் போர்
ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் பதற்றமானது இன்று வரையில் முடிந்தபடாக இல்லை. இந்த சமயத்தில் கச்சா எண்ணெய் விலையும் பேரலுக்கு 100 டாலர்களுக்கு மேலாக இருந்து வருகின்றது. ஆக ரஷ்யா – உக்ரைன் இடையேயான பிரச்சனையானது, தங்கத்தில் முக்கிய தூண்டுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எந்த சாதகமான அறிகுறியும் இல்லை
மேலும் இந்த போர் பதற்றமானது 3வது மாதத்திற்குள் நுழையும் நிலையில், போர் நிறுத்தத்திற்கான எந்த அறிகுறியும் இன்னும் இல்லை. உக்ரைன் நெருக்கடி நிலையானது இன்னும் மோசமடைந்து வரும் நிலையில், அது சப்ளை சங்கியில் இன்னும் மோசமான தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலையினை ஊக்குவிக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
தேவை
இந்திய சந்தையினை பொறுத்த வரையில் வரவிருக்கும் திருமண பருவத்தில், தங்கத்திற்கான தேவையானது அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தங்கத்தின் தேவை அதிகரிப்பும், தங்கம் விலையினை ஊக்குவிக்கும் ஒரு முக்கிய காராணியாக இருக்கலாம்.
Top 5 triggers that may dictate gold price in medium term
Top 5 triggers that may dictate gold price in medium term/தங்கம் விலையை மீடியம் டெர்மில் நிர்ணயிக்கும் 5 முக்கிய காரணிகள்.. கவனமா இருங்க!