தான் எந்தவொரு நோயினாலும் பாதிக்கப்படவில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தான் சிறந்த ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள தகவல்களை முற்றாக நிராகரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு நோயாளியைக் கூட பார்ப்பதற்காகவேனும் தான் வைத்தியசாலையின் பக்கம் செல்லவில்லை என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
தான் பேசும் தருணத்தில் கூட உடற்பயிற்சியை முடித்துக் கொண்டு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,