பாரதியார் தேசபக்திக்கும் ஒருமைப்பாட்டுக்கும் சமூக சீர்திருத்தத்திற்கும் சிறந்த உதாரணம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புகழாரம் சூட்டியுள்ளார்.
புதுச்சேரி சென்றுள்ள அமைச்சர் அமித் ஷா அங்குள்ள பாரதிய நினைவு இல்லத்தை பார்வையிட்டார். அங்குள்ள பாரதியின் படத்திற்கு மலர்களை தூவி அமித் ஷா மரியாதை செலுத்தினார். இந்நிலையில், ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமித் ஷா, பாரதியாரின் பாடல்கள் இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு தூண்டுகோலாக அமைந்ததாக தெரிவித்தார்.
புதுச்சேரியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டுதல் நிகழ்ச்சியில் மகிழ்ச்சியுடன் பங்கு கொண்டேன். https://t.co/2fpzfIZSoD
— Amit Shah (@AmitShah) April 24, 2022
அரவிந்தர் ஆசிரத்திற்கும் அமித் ஷா சென்று அரவிந்தர் மற்றும் அன்னையின் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தியதுடன் சிறிது நேரம் தியானம் செய்தார்.
இதனையடுத்து அரவிந்தரின் 150ஆவது ஆண்டு விழா மற்றும் புதுச்சேரி பல்கலைக்கழக நிகழ்ச்சிகளில் உள்துறை அமைச்சர் பங்கேற்றார். முன்னதாக சென்னையிலிருந்து புதுவை வந்த மத்திய உள்துறை அமைச்சரை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர்.
சமீபத்திய செய்தி: தொடர்ந்து தீ விபத்துக்குள்ளாகும் இ-ஸ்கூட்டர்கள் – ‘ஓலா’ எடுத்த அதிரடி முடிவு!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM