நாட்டில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையால் கடைகோடி மக்களும் பலனடைந்து உள்ளனர் – மோடி

Millions of people in the country have benefited from digital money transactions – Modi

புதுடெல்லி:
நாட்டில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையால் கடைகோடி மக்களும் பலனடைந்து உள்ளனர் என்று மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

மனதின் குரல் நிகழ்ச்சி பேசிய மோடி, மார்ச் மாதத்தில் ரூ.10 லட்சம் கோடி வரை யூபிஐ டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை நடந்துள்ளது. நாள்தோறும் ரூ.20 ஆயிரம் கோடி ஆன்லைன் பரிவர்த்தனைகள் நடைபெறுகிறது. சிறிய உணவகங்கள், பழக்கடைகளில் கூட டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செயல்படுத்தப்படுகிறது என்றார்,

தொடர்ந்து பேசிய மோடி, ஒரு நாள் முழுவதும் கையில் காசு எடுத்துச் செல்லாமல் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் பணம் செலுத்தி முடியும். ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தாமல் ஒரு நாள் முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனை அனுபவத்தை உணர வேண்டும். தொழில்நுட்பத்தின் சக்கி ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.