மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இன்று மாலை நடைபெறும் விழாவில் பிரதமர் மோடிக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கப்படுகிறது.
இதுகுறித்து மோடி தனது டுவிட்டரில், லதா மங்கேஷ்கருடன் தொடர்புடைய இந்த கவுரவ விருதுக்கு தாம் நன்றியுடனும், பணிவுடனும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
அவர் எப்போதும் வலுவான மற்றும் வளமான இந்தியாவைக் காண கனவு கண்டார் என்றும், தேசத்தை கட்டி எழுப்புவதில் உரிய பங்கு அளித்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பாரத ரத்னா விருது பெற்ற பழம்பெரும் சினிமா பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் கடந்த பிப்ரவரி மாதம் 92-வது வயதில் உயிரிழந்தார்.