பிரியங்கா காந்தியிடம் இருந்து எம்.எப். உசேனின் ஓவியத்தை 2 கோடி ரூபாய்க்கு வாங்கும்படி நிர்பந்திக்கப்பட்டதாக யெஸ் வங்கியின் இணை நிறுவனரான ராணா கபூர் அமலாக்கத்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
யெஸ் வங்கியில் நடந்த முறைகேடு தொடர்பாக ராணா கபூர் கைதான நிலையில், அவரும், டி.எச்.எப்.எல் நிறுவனர்களான கபில் மற்றும் தீரஜ் ஆகியோரும் இணைந்து 5 ஆயிரத்து 50 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இது குறித்து அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில், பெட்ரோலியத்துறை அமைச்சராக இருந்த முரளி தியோரா பிரியங்கா காந்தியிடம் இருக்கும் ஓவியத்தை வாங்கிக்கொள்ளும்படி தன்னிடம் கூறியதாகவும், அவ்வாறு செய்தால் பத்ம பூஷன் விருது கிடைக்கும் என தெரிவித்ததாகவும் ராணா கபூர் வாக்குமூலம் அளித்துள்ளார்.