செய்தி சுருக்கம்:
- புடினின் அணுஆயுத அச்சுறுத்தலுக்கு உலக தலைவர்கள் பயப்படுகிறார்கள்.
- அமெரிக்காவிடம் வரலாற்றில் இல்லாத நீர்மூழ்கிக் கப்பல் சக்தி இருக்கிறது டிரம்ப் கருத்து.
அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் பதிலாக நான் ஜனாதிபதியாக இருந்து இருந்தால் ரஷ்யாவிற்கு பலமான பதிலடி கொடுத்து இருப்பேன் என டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தொலைகாட்சி ஒன்றுக்கு அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் Donald Trump அளித்த பேட்டியில், ரஷ்ய ஜனாதிபதி புடின் தொடர்ந்து அணுஆயுத அச்சுறுத்தல் வழங்கி வருகிறது அதற்கு உலக தலைவர்களும் அஞ்சி அப்படி செய்யாதீர்கள் என கூவிவருகின்றன.
இவ்வாறு உலக நாடுகள் ரஷ்ய ஜனாதிபதி புடின் அணுஆயுத மிரட்டல்களுக்கு தொடர்ந்து அஞ்வதால் அவரும் அதனை தினம் தினம் செய்து மக்களை அச்சுருத்தி வருகிறார்.
இதன்முலம் தங்களை யாரும் தாக்க முடியாது என்ற நினைப்பில் ரஷ்ய ஜனாதிபதி புடின் இருகிறார், என்னென்றால் அவர்கள் (உலக தலைவர்கள்) அனைவரும் முட்டாள்கள், அவர்கள் பேச பயப்படுகிறார்கள் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அப்போது நீங்கள் இதற்கு என்ன சொல்லுவிர்கள், என்ன செய்விர்கள் என நிகழ்ச்சி தொகுப்பாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த டொனால்டு டிரம்ப், ரஷ்ய ஜனாதிபதி புடின் அணுஆயுதம் கொண்டு மிரட்டினால் அமெரிக்காவிடம் அதை விட அதிகமான அணுஆயுத இருக்கிறது.
உலக வரலாற்றில் யாரிடமும் இல்லாத மிகச்சிறந்த நீர்மூழ்கிக் கப்பல் சக்தி இருக்கிறது.
கூடுதல் செய்திகளுக்கு: பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல்: இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்!
புடின் அவரது சக்தியை பற்றி பேசினால் அதைவிட அமெரிக்காவிடம் மிக அதிகமான சக்தி மற்றும் ஆயுதங்கள் உள்ளன என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த செய்திக்கான வளம்: the sun