- வெற்றி விழா நாளுக்குள் உக்ரைனின் கிழக்கு எல்லை நகரை கைப்பற்ற ரஷ்ய ராணுவம் தீவிரம்.
- 80 சதவீகித உக்ரைனிய ராணுவ வீரர்கள் மீண்டும் தங்களது சேவைகளுக்கு திரும்பினர் .
உக்ரைன் ரஷ்யா போரினால் இதுவரை காயமடைந்த 80 சதவிகித உக்ரைனிய ராணுவ வீரர்கள் மீண்டும் தங்களது சேவைகளுக்கு திரும்பி இருப்பதாக அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
உக்ரைன் ரஷ்ய இடையிலான போர் தாக்குதல் முன்றாவது வாரத்தை தொட்டிருக்கும் நிலையில், உக்ரைனின் பெரும்பாலான நகரங்களை ரஷ்ய ராணுவம் உருத்தெரியாத அளவிற்கு அழித்துள்ளது.
மேலும் உக்ரைனின் கிழக்கு எல்லைப் பகுதியான டான்பாஸ் பகுதியை வரும் ரஷ்யாவின் வெற்றி விழா நாளான மே 9ம் திகதிக்குள் கைப்பற்றி விடவேண்டும் என்ற நோக்கில் தீவிர தாக்குதலை ரஷ்ய ராணுவ நடத்தி வருகிறது.
ரஷ்யாவின் இந்த ராணுவ தாக்குதலில் இருநாட்டு ராணுவ வீரர்களும் உயிர்களை இழந்தும், படுகாயமடைந்தும் உள்ளனர்.
உக்ரைன் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதுவரை கிட்டத்தட்ட 20,000க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்களும் 4500உக்ரைனிய வீரர்களும் உயிரிழந்து இருப்பதாக உக்ரைன் உக்ரைன் அரசு தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், தற்போது போரினால் படுகாயமடைந்த உக்ரைனிய வீரர்கள் 80 சதவிகித பேர் மீண்டும் போரில் தங்களது சேவையை தொடர இருப்பதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக உக்ரைன் துணை பாதுகாப்பு அமைச்சர் ஹன்னா மாலியர் வெளியிட்ட அறிக்கையில் உக்ரைன் இராணுவ மருத்துவத்தின் நிலை, சிகிச்சையின் தரம் மற்றும் மறுவாழ்வு பற்றி நாங்கள் பேசுகிறோம் என தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: உக்ரைனியர்களை கடத்தி செல்லும் ரஷ்யா: பாதுகாப்பு அமைச்சகம் பரபரப்பு தகவல்!
உக்ரைனில் ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கை மேற்கொண்டதில் இருந்து தங்கள் நாட்டின் இழப்பு குறித்து ரஷ்ய எந்தவொரு தகவலும் இதுவரை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்திக்கான வளம்: ட்விட்டர்
The Kyiv Independent