நெல்லை மாவட்டம் பழவூரில் நடைபெற்ற கொடை விழாவின் போது காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் வெட்டிய வழக்கில் கைதான நபர் போலீசிடம் இருந்து தப்ப முயல்கையில் பள்ளத்தில் விழுந்து கை முறிவு ஏற்பட்டது.
சுத்தமல்லி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணி புரியும் மார்க்ரெட் தெரேசா என்பவர் பழவூர் உச்சிமாகாளியம்மன் கோவில் கொடை விழா பாதுகாப்பு பணிக்கு சென்ற போது ஆறுமுகம் என்பவரால் கத்தியால் குத்தப்பட்டார்.
இதனை அடுத்து அவரை கைது செய்த போலீசார் கத்தியை பறிமுதல் செய்வதற்காக அழைத்து சென்றுள்ளனர். கொண்டாநகரம் பகுதியில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுக்க முயன்ற போது காவல்துறையினரிடம் இருந்து ஆறுமுகம் தப்பி ஓட முயற்சித்துள்ளார்.
அப்போது போலீசார் விரட்டியதில் அங்கிருந்த பள்ளத்தில் விழுந்த ஆறுமுகத்தின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.