அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலையை குறைக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “இந்தியாவில் பணவீக்கத்தின் அளவு 6.95 விழுக்காடாக இருக்கிறது. வங்கிகளில் நிரந்தர வைப்புத் தொகைக்கான வட்டி விகிதம் 5 சதவீதமாக மட்டுமே உள்ளது. நம் நாட்டு மக்கள் கடினமாக உழைத்து ஈட்டிய பணத்தை பிரதமர் நரேந்திர மோடியின் தந்திரம் அழித்துவிட்டது. அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்திருக்கிறது. இதனை குறைக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது?” என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதேபோன்று பணவீக்கம் தொடர்பாக விமர்சித்திருக்கும் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷிரினேட், “நுகர்வோர் பட்டியலில் உள்ள 299 பொருட்களில், கோழி, மீன், பால், நெய், மைதா, சமையல் எண்ணெய், பருப்பு வகைகள், வெங்காயம் உள்ளிட்ட 235 பொருட்களின் விலையானது, கடந்த 8 ஆண்டுகளில் பெட்ரோல் விலையை விட அதிகம் உயர்ந்துள்ளது” எனத் தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM