பிரான்சில் தேவாலயம் ஒன்றில் “மக்ரோனை கொல்ல வேண்டும்” என்று கத்திக்கொண்டே வந்த நபர் இரண்டு பேரை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்சில் இன்று அதிபர் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுவரும் நிலையில், நைஸ் நகரத்தில் உள்ள Église Saint-Pierre-d’Arène தேவாலயத்தில், இந்த சம்பவம் நடந்தது.
இன்று காலை 10 மணியளவில் (உள்ளூர் நேரம்) தேவாலயத்திற்குள் நுழைந்த, Fréjus-ல் பிறந்த 31 வயதான பிரெஞ்சுக்காரர், பாதிரியார் கிறிஸ்டோப்பை (Christophe) குறைந்தது 20 முறை கத்தியால் குத்தியுள்ளார்.
அப்போது அவரை காப்பாற்ற தாக்குதல்தாரியை தடுக்க முயன்ற போது கன்னியாஸ்திரி என்று நம்பப்படும் 72 வயது மூதாட்டியின் கைகளில் கத்திக்குத்து காயங்கள் ஏற்பட்டுள்ளன.
பாதிரியார் மார்பு மற்றும் கால்களில் காயம் அடைந்து ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. தேவாலயத்தில் இருந்து பாதிக்கப்பட்டவர்களை அவசர சேவைகள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றன.
தாக்குதல்தாரியை பொலிஸார் துரிதமாக கைது செய்துள்ளனர்.
உள்ளூர் அறிக்கைகள் மற்றும் அதிகாரப்பூர்வ ஆதாரங்களின்படி, அந்த நபர் bipolar Disorder நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. தீவிரவாத நோக்கம் இருப்பதாக எந்த சந்தேகமும் இல்லை.