கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த பிரதமர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அண்டை நாடான சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில், கோவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று பரவியது. இந்த வைரஸ் தொற்றுக்கு எதிராக, கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு விட்டாலும், அது பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து வருவது, அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே கடந்த சில நாட்களாக, இந்தியா, சீனா உள்ளிட்ட இடங்களில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், தென் கிழக்கு ஆசிய நாடான மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,624 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் அந்நாட்டில் கொரோனா தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 44,27,067 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா காரணமாக மேலும் 9 பேர் உயிரிழந்து உள்ளனர். இதுவரை இறந்தவர்கள் எண்ணிக்கை 35,491 ஆக உயர்ந்துள்ளது.
எண்ணெய் ஆலையில் பயங்கர தீ விபத்து: 100 பேர் உயிரிழப்பு!
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் இருந்து 10,041 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 43,10,599 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் தற்போதைய நிலவரப்படி 80,977 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே, கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிக்க பிரதமர் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர், சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. கொரோனா பரவல் அதிகரிக்கும் பட்சத்தில், ஊரடங்கில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படக் கூடும் என கூறப்படுகிறது.