இந்தியாவின் முன்னணி பங்கு தரகு நிறுவனங்கள் பல பங்குகளை ஆய்வு செய்து அவற்றில் சிலவற்றை பரிந்துரை செய்துள்ளன. எனினும் இந்த பங்குகளை வாங்கும் முன் அதனை ஆய்வு செய்து, இதில் பணம் போடலாமா? வேண்டாமா? ரிஸ்க் எடுக்கலாமா? வேண்டாமா? என்பதை நீங்களே தீர்மானியுங்கள்.
நாம் இன்று பார்க்கவிருக்கும் பங்குகள் சையண்ட், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், எல் & டி டெக்னாலஜிஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தான்.
இது குறித்து ஆக்ஸிஸ் செக்யூரிட்டி நிறுவனம் என்ன கூறியுள்ளது? வாருங்கள் பார்க்கலாம்.
தங்கம் விலையை மீடியம் டெர்மில் நிர்ணயிக்கும் 5 முக்கிய காரணிகள்.. கவனமா இருங்க!
எல் & டி டெக்னாலஜி
எல் & டி டெக்னாலஜி நிறுவனம் கடந்த 4வது காலாண்டில் நல்ல வளர்ச்சியினை கண்டுள்ளது. இதன் செயல்பாட்டு மார்ஜின் விகிதமும் மேம்பட்டுள்ளது. இதற்கிடையில் இனியும் இந்த நிறுவனம் வலுவான வளர்ச்சியினை காண வழிவகுக்கலாம். ஆக இந்த நிறுவனத்தின் பங்கு விலை அதிகரிக்கலாம். இதன் இலக்கு விலை 5100 ரூபாயினை தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சையண்ட்
சையண்ட் நிறுவனம் பல புதிய வணிக வாய்ப்புகளையும் கண்டுள்ளது. குறிப்பாக பல புதிய ஒப்பந்தங்களையும் போட்டுள்ளது. இதனால் அதன் வாடிக்கையாளர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ரூபாயின் சரிவு, குறைந்த பயண செலவுகள் மற்றும் மற்ற செலவுகள் என பலவும் குறைந்துள்ளது, நிறுவனத்தின் எபிடா வளர்ச்சியினை அதிகரித்துள்ளது. இது இன்னும் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் காராணமாக இப்பங்கி விலையும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹெச்சிஎல் டெக்னாலஜி
ஹெச் சி எல் டெக்னாலஜி நிறுவனம் தொடர்ந்து பல புதிய ஒப்பந்தங்களை போட்டு வருகின்றது. இதன் காரணமாக இனி வரவிருக்கும் காலாண்டுகளிலும் வலுவான வளர்ச்சியினை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2023ம் நிதியாண்டில் இந்த நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி விகிதம் 12 – 14% ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் எபிட்டா மார்ஜின் விகிதம் 18 – 20% ஆக அதிகரிக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் இலக்கு விலை 1345 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய பங்கு விலை நிலவரம்?
ஹெச்சிஎல் டெக்னாலஜி பங்கின் விலையானது கடந்த அமர்வில் சற்று அதிகரித்து, 1102.05 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் 52 வார உச்ச விலையே 1377.75 ரூபாயாகும்.
இதே சையண்ட் பங்கி விலையானது கடைசியாக கடந்த அமர்வில் 10.31% அதிகரித்து, 917.20 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
இதே எல் & டி டெக்னாலஜி நிறுவனத்தின் பங்கு விலையானது கடந்த அமர்வில் 3.37% குறைந்து, 4101.40 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
வளர்ச்சி அதிகரிக்கலாம்
மேற்கண்ட மூன்று நிறுவனத்தின் வளர்ச்சி விகிதமுமே நல்ல ஏற்றத்தினைக் கண்டுள்ள நிலையில், வரவிருக்கும் காலாண்டுகளிலும் நல்ல வளர்ச்சியினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தான் இப்பங்கினை நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர். எனினும் இப்பங்கினை வாங்குமுன் அனைத்து விஷயங்களையும் ஆராய்ந்து வாங்கலாம்.
****Disclaimer: இந்த பங்கினை தரகு நிறுவனம் பரிந்துரை செய்திருந்தாலும், இதனை வாங்கும் முன்பு முழுமையாக தெரிந்து கொண்டு அதன் பிறகு நீங்கள் இறுதியாக முடிவெடுக்கலாம்.
Axis securities bullish on these 3 IT stocks after post q4 results
Axis securities bullish on these 3 IT stocks after post q4 results/முதலீடு செய்ய இதுதான் சரியான வாய்ப்பு.. முத்தான 3 பங்குகளை பரிந்துரை செய்த நிபுணர்கள்..!