புகழ்பெற்ற பாடகி லதா மங்கேஷ்கர் இந்த ஆண்டு தொடக்கத்தில் தனது 92-வது வயதில் காலமானார். இவரது நினைவாக ஆண்டுதோறும் லதா தீனாநாத் மங்கேஷ்கர் விருது வழங்க முடிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக மாஸ்டர் தீனாநாத் மங்கேஷ்கர் ஸ்ம்ருதி பிரதிஷ்டான் அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில், “நமது தேசத்திற்கும், அதன் மக்களுக்கும், நமது சமூகத்திற்கும் பாதையை உடைக்கும் அற்புதமான மற்றும் முன்மாதிரியான பங்களிப்புகளை செய்த ஒரு நபருக்கு ஒவ்வொரு ஆண்டும் இந்த விருது வழங்கப்படும்” என்று குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில், லதா தீனாநாத் மங்கேஷ்கரின் முதல் விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்படுகிறது. இதனை பெறுவதற்காக பிரதமர் மோடி இன்று மும்பை செல்கிறார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
மும்பையில் நாளை (இன்று) மாலை நான் முதல் லதா தீனாநாத் மங்கேஷ்கர் விருதைப் பெறவிருக்கிறேன். லதா அவர்களின் தொடர்புடைய இந்த கௌரவத்திற்கு நான் நன்றியுடனும், பணிவுடனும் ஏற்றுக் கொள்கிறேன். அவர் எப்போதும் வலுவான மற்றும் வளமான இந்தியாவைக் கனவு கண்டார். தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பங்களித்தார்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படியுங்கள்.. போலீசார் முன்னிலையில் பா.ஜ.க தலைவர் தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு – மும்பையில் பரபரப்பு