அமெரிக்காவின் Guantanamo Bay சிறைச்சாலையில் நீண்ட 14 ஆண்டுகள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தியதற்கு எதிராக முன்னாள் கைதி ஒருவர் கனடா நிர்வாகத்தின் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்.
கனடாவின் மாண்ட்ரீலில் பகுதியில் தங்கியிருந்தவர் Mohamedou Ould Slahi என்ற மொரிட்டானிய நாட்டவர்.
இவரை திடீரென்று ஒருநாள் கைது செய்த கனேடிய உளவுத்துறை, CN Tower மீது குண்டுவைக்க திட்டமிட்டதாக கூறி ஒப்புதல் வாக்குமூலம் பெற்றுள்ளது.
வெறும் இரண்டு மாதங்களுக்கும் குறைவான காலம் மாண்ட்ரீல் பகுதியில் தங்கியிருந்த ஸ்லாஹி, CN Tower குறித்து கேள்விப்பட்டதே இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி, தீவிரவாதி என முத்திரைக்குத்தப்பட்ட தம்மை, கனடா நிர்வாகிகள் அமெரிக்காவிடம் ஒப்படைத்தாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், நீண்ட 14 ஆண்டுகள் Guantanamo Bay சிறையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போது 51 வயதாகும் ஸ்லாஹி, 35 மில்லியன் டொலர் இழப்பீடு கேட்டு கனடா நிர்வாகத்தின் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்.
கடந்த 2000 ஆம் ஆண்டு தீவிரவாத செயற்பாடு தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் கனடா உளவுத்துறை விசாரணை மேற்கொள்ள, ஒருகட்டத்தில் கனடாவில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து 2001ல் அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக ஸ்லாஹி சொந்த நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அங்கிருந்து அமெரிக்க அதிகாரிகளால் கடத்தப்பட்டு ஜோர்டானில் 8 மாத காலம் சிறை வ்ஃபைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து Guantanamo Bay சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.